×

அரசியல் களத்தில் இருந்து ஆன்மிக களத்துக்கு சேலம் விஐபி மாறிய ரகசியத்தை சொல்கிறார் : wiki யானந்தா

‘‘ஆன்மிகமா… அரசியலா ஒன்றுமே புரியல என்று இலை தொண்டர்கள் குழம்பி போய் இருக்காங்களாமே, ஏனாம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அரசியல் களத்தில் சேலம் விவிஐபி சமயம் பார்த்து சின்ன  மம்மியை ஓரங்கட்டினார். அதன் பிறகு சின்னமம்மி, மாநிலம்  முழுவதும் ஆன்மிக பயணம்  போனாங்க. இந்த ரூட்டில்தான் இப்போது  சேலத்துக்காரரும் போறாரு. சொந்த ஊரில் முகாமிட்டிருக்கும் அவரு,  முதல்நாளில் உலகின் உயரமான முருகன்சிலை இருக்கும் கோயிலுக்கு போய் சாமி  கும்பிட்டாரு. அப்புறம் மற்றொரு  கோயிலுக்கு போயி, தேரு இழுத்தாரு.  அடுத்தடுத்து நிறைய கோயிலுக்கு போக பிளான் பண்ணியிருக்காரு. இவரு அரசியல்  களத்தில் இருந்து ஆன்மிக பயணம் போறாரு. சின்ன மம்மியோ ஆன்மிக பயணத்தில்  இருந்து தீவிர அரசியலுக்கு வரப்போறாங்க. அவங்களோட அரசியல் பயணம் சூடு  பிடிக்கும் போது, சேலத்துகாரரு ஆன்மிக பயணத்தில் மட்டுமே இருப்பாரு போல.  எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் சின்னமம்மி காட்டும் ரூட்டில் தான்  வருங்காலத்தில் இலைக்கட்சிகாரங்க எல்லோரும் போயாகணும். அதைத்தாங்க காலம்  சூசகமாக காட்டுது என்று பொடிவைத்து பேசுறாங்களாம் சின்ன மம்மியின் அதி  தீவிர அடிப்பொடிகள்… ஆன்மிக களத்தை முடித்துவிட்டு வந்து அதே சூட்டோடு தேர்தல் சூட்டை தொடங்குவேன்… அதன் பிறகு எனக்கு எதிரியே இருக்க மாட்டாங்க என்று சேலம் விவிஐபியின் அடிபொடிகள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சேலத்திடம் தேனி ேதாற்ற கதையை சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஹனிபீ  மாவட்டத்தில் இலைக்கட்சியின் உள்கட்சித் தேர்தலில் அனைத்து நகர, பேரூர்களுக்கும் அதிளவில் நம்ம ஆட்கள் போட்டியிட வேண்டும் என  கட்சித் தலைமை அறிவித்திருந்தது. ஆனால், நகரில் மட்டும் ஏற்கனவே, நகர  செயலாளராக இருந்து வரும் ‘ஏழெழுத்துக்காரர்’ தரப்பு மட்டுமே ஒரு அணியாக  வேட்பு மனுத்தாக்கல் செய்ததாம். இதனால் போட்டியின்றி இந்த அணியினர்  தேர்வாகினர். தர்மயுத்த நாயகருக்கு ஆதரவாளராக இருந்தவர் இவர். சமீபத்தில் சேலம்காரரை சந்தித்த பிறகு அப்படியே மாறிட்டார். இதனையடுத்து,  தர்மயுத்த நாயகர் தரப்பு இவரை ஓரம்கட்டத் தொடங்கியது. நடந்து முடிந்த  உள்கட்சித் தேர்தலில் ஹனிபீ மாவட்டத்தில் நகரில் ஏழெழுத்துக்காரர் நகர  செயலாளர் ஆகிவிடக்கூடாது என தர்மயுத்த நாயகரே கட்சியினருக்கு மறைமுக  உத்தரவிட்டும், இந்த ஏழெழுத்துக்காரருக்கு எதிராக யாரும் போட்டியிட  முன்வராததால், இவரையே செயலாளராக அறிவிக்கும் நிலை ஏற்பட்டு விட்டதாம்.  இந்நிலையில் தனக்கு எதிராக சேலம்காரரிடம் தேனிகாரர் இப்படி தான் தோற்றாராம். இந்த கோபத்தில் தர்மயுத்த நாயகர்  தரப்பு திடீரென நகரை இரண்டாக பிரித்து ஏழெழுத்துக்காரின் பலத்தை குறைக்கும்  வகையில், தங்கள் ஆதரவாளரான ‘‘பெருமாள் பெயர் கொண்டவரை’’  மற்றொரு நகர  செயலாளராகவும் அறிவித்தாராம். ஏழெழுத்துக்காரர் பதவியை டம்மியாக்கினால்  அவராகவே பதவியை ராஜினாமா செய்து விடுவார் என எதிர்பார்த்த தர்மயுத்த நாயகர்  தரப்பின் தந்திரத்தை புரிந்து கொண்டு, தனது நகர செயலாளர் எல்லைப்பரப்பை  எவ்வளவு சுருக்கினாலும் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என தீர்க்கமான  முடிவோடு காலம் கடத்தி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வெயிலூர் அட்ராசிட்டி என்ன…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ வெயிலூர் மாவட்ட  மாற்றுத்திறனாளி நல அலுவலகத்துக்கு பார்வை இழந்ததாக கூறி உதவித்தொகை பெற்று  வரும் பெண் வந்துள்ளார். அப்போது அவருக்கு பார்வை நன்றாக இருப்பதை  பார்த்து அதிர்ந்துபோன அதிகாரி தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவிச்சதும்,  அங்கு வந்த போலீஸ் அதிகாரி சமரசம் பேசிவிட்டு வழக்குப்பதிவு செய்யாமா  போய்ட்டாராம். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மாற்றுத்திறனாளிகள்  நலத்துறை சார்பில் புகார் கொடுக்கப்பட்டு 8 பேர் மீது வழக்குப்பதிவாகி  விசாரணை நடக்குது.இலைக்கட்சி ஆட்சியில மாற்றுத்திறனாளி நல  உதவித்தொகைக்கு விண்ணப்பிச்சு காத்திருந்த பெண்ணுக்கு இந்த மாதம் அரியர்  பணம் சேர்ந்து 25 ஆயிரம் ரூபா வந்துருக்கு. இத அலுவலகத்துல இருக்குற  கருப்பு ஆடுகள் மூலம் தெரிஞ்சுகிட்ட காட்பாடியில இருக்குற ‘பாஸ்’ என்ற புரோக்கர், அந்த பெண்ணுக்கு போன் போட்டு பாதி தொகை கொடுக்கணும்னு  மிரட்டியிருக்காரு. இந்த ஆடியோ விஜிலென்சுக்கு போயிடுச்சு. இதுனால  விஜிலென்ஸ் கழுகு பார்வை மாற்றுத்திறனாளி நல அலுவலக நடவடிக்கைகள் மீது  விழுந்திருக்கு. முதற்கட்ட விசாரணையில பெண்ணை மிரட்டியவர் மீது கடந்த மாதம்  விருதம்பட்டு போலீசில் பைக் திருட்டு வழக்கு பதிவானது தெரியவந்துள்ளது.இலைக்கட்சி  ஆட்சியில தலைத்தூக்கிய புரோக்கர்கள்தான் போலி அடையாள அட்டைகளை வழங்கி,  இப்போதும் மாற்றுத்திறனாளி நல நிதியில் முறைகேடுகளில் ஈடுபட்டு வராங்களாம்.  இப்போ விஜிலென்ஸ் பார்வை விழுந்திருக்கிறதால, இலைக்கட்சி ஆட்சியில நடந்த  பழைய முறைகேடுகளும் வெளிவரப்போதுனு பரபரப்பா பேசப்படுது…’’ என்றார் விக்கியானந்தா.   ‘‘அல்வா நகர மாநகராட்சியில பாளையம் மண்டலத்துல வார்டு 28ல அனுமதி இல்லாம புட் பார்க் தொடங்கப்பட்டதாம். இதை உள்ளூர் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லையாம். மாநகராட்சிக்கும், போலீசுக்கும் பெரிய அளவுல மாமூல் கொடுத்தாங்களாம். அல்வா மாவட்டத்துல உளவு வேலை பார்க்கும் நாகத்தின் பெயரை கொண்ட உதவி அதிகாரியானவர்தான் போலீஸ் அதிகாரிகளுக்கு மாமூல் வாங்கிக் கொடுத்து பிரச்னையை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டதாம். இது எப்படியோ மாநில உளவுப் பிரிவு மூலமாக கண்டுபிடிச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திட்டாங்களாம். இதனால, மாநகராட்சி அதிகாரிங்க அதன்பிறகு சென்று புட் பார்க்கை மூடி சீல் வைச்சிட்டாங்களாம். பணம் வாங்கிக் கொடுத்த நாகமான உயர் அதிகாரி எங்கு நம்ம பெயர் லீக் ஆகிடுமோன்னு பயத்தில இருக்காராம். அதேநேரத்துல, அவர் அடிக்கடி தன் பெயரைப் போலவே நாகத்தின் பெயரைக் கொண்ட பெண் அதிகாரியை அடிக்கடி சந்திக்கிறாராம். இந்த ரெண்டு பாம்புகளுக்கும் அப்படியென்ன டீலிங்கோ யாருக்கு தெரியும் என்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.    …

The post அரசியல் களத்தில் இருந்து ஆன்மிக களத்துக்கு சேலம் விஐபி மாறிய ரகசியத்தை சொல்கிறார் : wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem VIP ,Uncle ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...